Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
எந்தன் இதயக் கூட்டில்
 செதுக்கியச் சிற்பம் நீ !
கடல் கடந்து கண்டறிந்த
திராவியம் நீ !
கண்ணால் கண்ட
ஓவியம்  நீ !
கனவாய் மறைந்த
காவியம் நீ !
3
💖 General 💖 / Re: 💖 GooD MorninG THC 💖
« Last post by KeeRthi on May 08, 2018, 10:19:30 AM »
4
💖 Health Tips 💖 / கோடையை சமாளிக்க
« Last post by ammu on May 07, 2018, 11:58:11 AM »
கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது

கோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது?

பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பதுபெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.

உடல் உஷ்ணம் தவிர்க்க நீருடன் எவற்றை சேர்க்க வேண்டும்?
வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவும். மண்பாண்ட தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உஷ்ணத்தை தவிர்க்கலாம்.

கோடை பாதிப்பை தவிர்க்க வேறு விளையாட்டுக்கள் என்ன?
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கை, சுரைக்காய், புடலை, பூசணி காய்கள் சாப்பிடலாம்.வெயில் மதியம் 1:00 முதல் மாலை 4:00 மணி அதிக பாதிப்பை தரும். இந்நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால்,சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.

கோடையை சமாளிக்க எப்படி குளிக்க வேண்டும்?

குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளை குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
6
💖 General 💖 / Re: 💖 GooD MorninG THC 💖
« Last post by KeeRthi on May 07, 2018, 05:28:39 AM »
9
ஆசை முகமறந்து போச்சே -- இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம் -- எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தோற்றம் -- அதில்
கண்ண னழகு முழுதில்லை;

நண்ணு முகவடிவு காணில் -- அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலு மில்லாமல் -- அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்;

வாயு முரைப்பதுண்டு கண்டாய் -- அந்த
மாயன் புகழினையெப் போதும்.

கண்கள் புரிந்துவிட்ட பாவம் -- உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;

பெண்க ளினிடத்திலிது போலே -- ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்கும் வண்டும் -- ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -- இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் -- இந்தக்
கண்க ளிருந்தும் பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -- இனி
வாழும் வழியென்னடி தோழி?
10
💖 பாடல்வரிகள் 💖 / yaro ivan
« Last post by ammu on May 06, 2018, 10:44:01 AM »
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
கரைசேருமா உன் கைசேருமா
எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெய்யிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
Pages: [1] 2 3 ... 10