Author Topic: மதுரை...!!  (Read 78 times)

Thangameen

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
மதுரை...!!
« on: October 16, 2018, 10:15:23 AM »
பெயர்க் காரணம் :

    இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை > மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி). இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[17] சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[17][19] தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.

                 மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது.

               மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

  சுற்றுலா :-
               *  புதுமண்டபம்
               * திருமலை நாயக்கர் அரண்மனை
               * காந்தி அருங்காட்சியகம்
               * சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்

   ஊடகம் மற்றும் பிற சேவைகள் :-
             அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, [142] தனியார் நிறுவனங்களான  ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம்,[143] ரேடியோ மிர்ச்சி, [144] ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், [145] தினகரன்,[146] தமிழ் முரசு, தினத்தந்தி, [147] தினமணி,[148] ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், [149] தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, [150] தி நியூ இந்தியன் எக்சுபிரசு,[148] டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா[151] ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன.