Author Topic: பெண்ணின் பெருமை....  (Read 29 times)

Thangameen

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
பெண்ணின் பெருமை....
« on: October 30, 2018, 02:06:16 PM »
தலைக்கு தலைசுட்டி அழகா?
தலைசுட்டிக்கு தலை அழகா?

நெத்திக்கு பொட்டு அழகா?
பொட்டுக்கு நெத்தி அழகா?


கண்ணுக்கு மை அழகா?
மைக்கு கண் அழகா?

காதுக்கு தோடு அழகா?
தோடுக்கு காது அழகா?

மூக்குக்கு மூக்குத்தி அழகா?
மூக்குத்திக்கு மூக்கு அழகா?

கழுத்துக்கு தாலி அழகா?
தாலிக்கு கழுத்து அழகா?

கைக்கு வளை அழகா?
வளைக்கு கை அழகா?

விரலுக்கு மோதிரம் அழகா?
மோதிரத்துக்கு விரல் அழகா?

இடுப்பிற்கு ஒட்டியாணம் அழகா?
ஒட்டியானத்திற்கு இடுப்பு அழகா?

காலுக்கு கொலுசு அழகா?
கொலுசுக்கு கால் அழகா?

கால் விரலுக்கு மெட்டி அழகா?
மெட்டிக்கு கால் விரல் அழகா?

பெண்ணுக்கு பெண்மை அழகா?
பெண்மைக்கு பெண் அழகா?

அழகிற்கு அழகு சேர்க்கும் பதுமையாம் பெண்மை.
அகமும் புறமும் அழகானால் அவளுக்கு செழுமை.
அதை பேணிக் காத்திட்டால் பெண்ணிற்கு பெருமை.
அதை உணர்ந்து நடந்தால் உலகிற்கு நன்மை.

ஆணெனும் ஆணவம் அழிந்திடுமே உலகினில்,
பெண்ணிற்கு பெண்ணின் பெருமை புரிந்துவிட்டால்.