Author Topic: கார்த்திகை தீபம்!!  (Read 71 times)

Thangameen

  • Sr. Member
  • ****
  • Posts: 341
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
கார்த்திகை தீபம்!!
« on: November 23, 2018, 12:10:12 PM »



கார்த்திகை விளக்கின் தத்துவம் :

எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது.; தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

தீபம் ஏற்றும் முறை :

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.


தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.


ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.

ammu

  • Sr. Member
  • ****
  • Posts: 603
    • View Profile
Re: கார்த்திகை தீபம்!!
« Reply #1 on: December 15, 2018, 11:24:41 AM »
apa inimel 5 vilaku eathifdalam sis