Author Topic: சிரிப்(பு)பூக்கள்...  (Read 9 times)

Thangameen

  • THC Team
  • Full Member
  • ***
  • Posts: 224
  • Gender: Female
  • ! keep smile..& make others too !
    • View Profile
சிரிப்(பு)பூக்கள்...
« on: November 23, 2018, 03:07:00 PM »
1 )சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு
.ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு-


2)கண்டதும்  காதலில்  விழுந்தேன்;
அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,
 பொத் தென  காலில்  விழுந்தேன்!


3)புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் ‏இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?""நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டே‎னு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

4)மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஒண்ணுமில்லை
 மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.அப்பா: ???????